search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் திறப்பு குறைப்பு"

    மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்காக கடந்த சில நாட்களாக 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 320 கன அடியாக குறைக்கப்பட்டது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

    நேற்று 491 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 320 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    கால்வாய் பாசனத்திற்கு கடந்த சில நாட்களாக 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 320 கன அடியாக குறைக்கப்பட்டது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு தண்ணீர் அதிகமாக திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    கடந்த 15-ந் தேதி 100 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து நேற்று 86.83 அடியானது. இன்று மேலும் ஒரு அடி சரிந்து 85.71 அடியானது. இதனால் கடந்த 16 நாட்களில் 14.29 அடி நீர்மட்டம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது. #MetturDam
    கால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையில் நேற்று 750 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 600 கன அடியாக குறைக்கப்பட்டது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு கடந்த 7 மாதங்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 4 ஆயிரத்து 696 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 4 ஆயிரத்து 337 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நேற்று காலை 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் மாலையில் தண்ணீர் திறப்பு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இன்று காலையும் அதே அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    கால்வாய் பாசனத்திற்கு நேற்று 750 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 600 கன அடியாக குறைக்கப்பட்டது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது.

    நேற்று 103.8 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 103.74 அடியாக சரிந்தது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்காவிட்டால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. #MetturDam


    மேட்டூர் அணையில் இருந்து ஏற்கனவே காவிரி டெல்டா பாசனத்திற்கு 17ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்திற்கு 850 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்ட நிலையில், நேற்றிரவு முதல் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் மழை பெய்துவருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    கடந்த 30-ந் தேதி 2ஆயிரத்து 538கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 3,012 கனஅடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 4,072 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து ஏற்கனவே காவிரி டெல்டா பாசனத்திற்கு 17ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்திற்கு 850 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்ட நிலையில், நேற்றிரவு முதல் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.

    அதன்படி காவிரி டெல்டா பாசனத்திற்கு 13ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்திற்கு 850 கனஅடியும் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    நேற்று 98.87 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 98.04 அடியாக சரிந்தது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரித்தால் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. #MetturDam
    வீராணம் ஏரியில் இருந்து இன்று சென்னைக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இது நேற்றைய அளவை விட 2 கனஅடி குறைவாகும். #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாகவும், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் வீராணம் ஏரி காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.

    கீழணையில் இருந்து கடந்த ஜூலை 27-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 1,100 கனஅடி தண்ணீர் வந்தது.

    இன்றும் தொடர்ந்து அதே அளவான 1,100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. கடந்த சிலநாட்களாக தொடர்ந்து 47 அடியாக வைக்கப்பட்டுள்ளது.

    விவசாய பாசனத்துக்கு கடந்த 26-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு நேற்று 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்றும் அதே அளவான 300 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு அனுப்பப்படுகிறது.

    சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த மாதம் 14-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று 74 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. இன்று 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இது நேற்றைய அளவை விட 2 கனஅடி குறைவாகும். #VeeranamLake
    விவசாய பாசனத்துக்கு கடந்த 26-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இன்று வினாடிக்கு 277 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இது நேற்றையவிட 23 கன அடி குறைவாகும். #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    விவசாயிகளின் உயிர்நாடியாகவும், சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் வீராணம் ஏரி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் கீழணையில் இருந்து கடந்த ஜூலை 27-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 1,350 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து சற்று குறைந்து 1,300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் ஏரியின் நீர் மட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 47 அடியாகவே வைக்கப்பட்டுள்ளது.

    விவசாய பாசனத்துக்கு கடந்த 26-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று ஏரியில் இருந்து வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டது. இன்று வினாடிக்கு 277 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இது நேற்றையவிட 23 கன அடி குறைவாகும்.

    சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த மாதம் 14-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று 72 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. இன்று 73 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இது நேற்றையவிட 1 கன அடி அதிகமாகும். #VeeranamLake
    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. அந்த அணைகளில் இருந்து வினாடிக்கு 1.30 லட்சம் கனஅடி நீர் செல்கிறது. #KabiniDam #KRSDam
    மைசூரு:

    கர்நாடகத்தில் கடந்த மே மாதம் இறுதியில் இருந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக கர்நாடக கடலோர மாவட்டங்களாக தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் மற்றும் மலைநாடு என அழைக்கப்படும் சிக்கமகளூரு, குடகு, சிவமொக்கா ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. இதன்காரணமாக கர்நாடகத்தில் உள்ள முக்கிய அணைகள் நிரம்பின.

    முக்கியமாக குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் கொட்டி தீர்த்து வரும் கனமழையால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி பகுதியில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணையும், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி பகுதியில் உள்ள கபினி அணையும் கடந்த 2 மாதங்களில் 2 முறை முழு கொள்ளளவை எட்டி நிரம்பின. இதனால் இந்த அணைகளில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கும் அதிகமாக திறக்கப்பட்டது. இதன்காரணமாக, காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    நேற்று காலை நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் 121.65 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 94,382 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 84,060 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோல, கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் 2,280.13 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 47,529 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 46,667 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.



    இந்த அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்துள்ளதால், அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

    இரு அணைகளில் இருந்தும் நேற்று முன்தினம் வினாடிக்கு 1.62 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1.30 லட்சம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டாலும், காவிரி மற்றும் கபிலா ஆறுகளில் தொடர்ந்து காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது.

    இதனால், கரையோரத்தில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காவிரி, கபிலா ஆறுகளில் வெள்ளம் குறைந்த பின்னர் தான், அவர்கள் கரையோர பகுதிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  #KabiniDam #KRSDam
     
    ×